Sunday, 11 March 2012

செவி வழி அரங்கம்- வானொலியில் எனது நாடகங்கள்!

வணக்கம்!
தங்கள் வரவு நல்வரவாகட்டும்!


வானொலியில் எனது நாடகங்கள்!





துளசி


துளசி



கனடா தமிழ் வானொலியில் பலதும் பத்தும் எனும் நிகழ்ச்சியைத்தயாரித்து வழங்கினேன்.அந்த நிகழ்வில் கவிதை, நாடகம், மருத்துவம் எனபல இடம்பெறும். அங்கு தொடர்ந்து இந்த நாடகம் ஒலி பரப்பாகியது, பல பாத்திரங்களையும் தனி நபர் அரங்காய் நிகழ்த்தினேன்.

இந்த நாடகத்தின் ஒலி வடிவம் என்னிடமில்லை, விரைவில்அதில் ஒரு பகுதியைச் சேர்க்கவுள்ளேன், மேலும் இந்த அரங்கின் பேருண்மை 'அரங்கம் காட்டும் அதிசய வாழ்வு' எனும் நூலில் அர்த்தப்பட ஆராயப்படும்.


வலண்டைன்


வலண்டைன்

இலக்கிய சங்கமம் நிகழ்வில் லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பட்டுள்ளது. இதன் அரங்கப் பேருண்மை அரங்கம் காட்டும் அதிசய வாழ்வு நூலில் தர்க்கிக்கப்படும்.


மயாணத்தில் மன்று

மயாணத்தில் மன்று

இலக்கிய சங்கமம் லண்டன் வானொலியில் ஒலிபரப்பாகியது.

மேலும் ஒரு தடவை நேதர்லாந்தில் மேடையேற்றப்பட்டுள்ளது, எல்லாப்பாத்திரங்களையும் தனி நபர் அரங்காய் நிறைவேற்றியுள்ளேன்.

இங்கே பேய்களுக்கும் அரிச்சந்திரனுக்கும் இடையே நிகழும் தர்க்கம்
ஒலிவடிவம் பெற்று அரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அரங்கப் பேருண்மை எனது அரங்கம் காட்டும் அதிசய வாழ்வில் எழுதப்படும். 






செட்னா

செட்னா

இன்அவுட்  எனும் துருவப் பழங் குடியினரின் புராணத்தை நாடகமாக்கினேன்.
அதில் சேத்ன எனும் கன்னியின் கண்ணீர்க்கதை சொல்லப்பட்டுள்ளது!

இதனது அரங்கப் பேருண்மை பற்றி எனது 'அரங்கம் காட்டும் அதிசய வாழ்வு ' எனும் நூலில் எழுதுகின்றேன்.

இந்த நாடக ஒலி வடிவம் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது, உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

அன்புடன்
நடராசா கண்ணப்பு

இலக்கிய சங்கமம் - லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகியது.